பூமிக்குத் திரும்பும் சுபான்ஷு சுக்லா குழு; எதிர்பார்ப்பில் உலகம்

0
22

சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து சுபான்ஷு சுக்லா தலைமையிலான குழு நாளை பூமிக்குத் திரும்பும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 நாட்களாகச் சர்வதேச விண்வெளி மையத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட அவர்கள் இன்று மாலை அங்கிருந்து புறப்பட்டு நாளை மாலை பூமியை வந்தடைவர். அவர்கள் பயணிக்கும் விண்கலம் நாளை அமெரிக்க கலிபோர்னியாவின் கடல் பிரதேசத்தில் வந்து இறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பூமியை வந்தடைந்ததன் பின்னர் நாசாவின் ஜொன்சன் விண்வெளி மையத்தில் மருத்துவ மேற்பார்வையில் வைக்கப்பட்டு உடல்நிலை சீராக உள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் அவர்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.