மட்டக்களப்புக்கு சுற்றுலா சென்ற ஆசிரியை உள்ளிட்ட மாணவர்கள் உயிரிழப்பு!

0
265

மட்டக்களப்புக்கு சுற்றுலா சென்ற ஆசிரியர் உட்பட 4 பேர் படகு கவிழ்ந்ததினால் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12-02-2023) கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள 40 ஆம் வெட்டை கங்காணியார் குளத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த விபத்து சம்பவத்தில் களுவுந்தன் வெளியைச் சேர்ந்த 27 வயதுடைய ஆசிரியர் உட்பட 16 வயதுக்குட்பட்ட த.சஜித்தன்,  ச.தனு, வீ.விதுசன் என்ற மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சுற்றுலா சென்ற ஆசிரியர் உட்பட மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்! மட்டக்களப்பில் சம்பவம் | Four People Died Including Teacher Tourism

களுவுந்தன் வெளி அரச தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பொதுத்தர சாதாரண தரத்தில் கல்வி பயிலும் 3 ஆண் மாணவர்களும் 4 பெண் மாணவிகளும் ஆசிரியர் ஒருவருமாக 8 பேர்கள் ஒன்றிணைந்து தாந்தாமலை பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

இவர்கள் பயணம் செய்த தோணி கவிழ்ந்ததினால் இவ் அணர்த்தம் ஏற்பட்டுள்ளது. இவர்களது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.