இலங்கையில் 22 மாணவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மாணவி!

0
137

தனமல்வில பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர், அதே பாடசாலையில் கல்வி கற்கும் 22 மாணவர்களினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

ஒரு வருடமாகக் குழுவாக இணைந்து தம்மைக் கடுமையாகத் துஷ்பிரயோகம் செய்ததாக தனமல்வில காவல் நிலையத்தில் அம்மாணவி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதன்படி சம்பவத்துடன் தொடர்புடைய 22 மாணவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அனைவரையும் கைது செய்வதற்கான விசாரணைகளை தனமல்வில காவல் துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான உண்மைகளை மறைத்தமைக்காக அந்த பாடசாலையின் அதிபர் உட்பட ஏனையோருக்கும் எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.