இஸ்ரேலுக்கும் ஹமாஸ் தரப்புக்கும் இடையே சமரச முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக கத்தார் வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இரு தரப்புக்கும் இடையில் கைதிகள் பரிமாற்றம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் பேசப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை (7 அக்டோபர்) இரவிலிருந்து தொடரும் பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமான பாதையில் சென்று கொண்டிருப்பதாகக் கத்தார் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மஜீட் அல்-அன்சாரி (Majed Al-Ansari) கூறினார்.

ரத்தக் களரியை நிறுத்தவேண்டும்
அனைத்துத் தரப்பினருடனும் தொடர்பில் இருக்கிறோம். ரத்தக் களரியை நிறுத்தவேண்டும். கைதிகளை விடுவிக்கவேண்டும். பூசல் வட்டார நாடுகளுக்குப் பரவாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என தெரிவித்த கத்தார் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மஜீட் அல்-அன்சாரி நாங்கள் இவற்றுக்கு முன்னுரிமை அளிக்கிறோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அதேவேளை இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை திடீரென ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதுமட்டுமல்லாது தங்களது பார்வையில் தென்பட்டவர்களை சுட்டுத்தள்ளினர்.
இதனால் இஸ்ரேலில் பலி எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அதேவேளையில் பெண்கள், சிறுமிகள், முதியர்வகள் உள்ளிட்டோரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் குழுவினர் பிடித்துச் சென்றுள்ளமை உலக நாடுக?ள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.