பச்சை கம்பளங்களை அறிமுகப்படும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்: சுற்றுச்சூழலை பாதுகாக்க விசேட வேலைத்திட்டம்

0
149

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது விமானங்களின் எடையைக் குறைத்து எரிபொருள் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கில் புதுமையான “பச்சைக் கம்பளங்களை” (‘GREEN CARPETS’) நடைமுறைப்படுத்தியுள்ளது.

குறித்த திட்டமானத, அப்புறப்படுத்தப்பட்ட மீன்பிடி வலைகள், பிளாஸ்டிக் மற்றும் துணி போன்ற மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை உள்ளடக்கிய பிரத்யேகமாக பதப்படுத்தப்பட்ட நைலானில் இருந்து வடிவமைக்கப்பட்ட இந்த இலகுரக தரைவிரிப்புகள் குறைந்த எரிபொருள் மற்றும் நீர் உபயோகத்தில் தயாரிக்கப்படுகின்றன.

2009இல் “நட்பு விமானங்கள்” திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் ஆசியன் கேரியர் அதன் பாரம்பரியத்தை கட்டியெழுப்ப, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான விமான நிறுவனத்தின் அர்ப்பணிப்புடன் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் ஆண்டு தோறும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தரைவிரிப்புகளை பயன்படுத்துவன் மூலம் 21 மில்லியன் ரூபாவினை சேமித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் அவை நிதிச் சேமிப்பிற்கு பங்களிப்பது மட்டுமல்லாமல், கார்பன் உமிழ்வைக் குறைப்பதிலும், சுற்றுச் சூழல் பாதிப்பை சுமார் 248.79 டன்கள் குறைப்பதிலும் பங்கு வகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் “லான்டல் டெக்ஸ்டைல்ஸ்”(“Lantal Textiles) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த தரைவிரிப்புகள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்சுக்கு குறிப்பிடத்தக்க சூழல் பாதுகாப்பை வழஙடகுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கூடுதலாக 2016ஆம் ஆண்டில் பிசினஸ் டிராவலரால் ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் இரண்டாவது குறைந்த கார்பன் – உமிழும் விமான நிறுவனமாக தேசிய கேரியர் அங்கீகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.