சிறிதரன் – ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா கொழும்பில் விசேட கலந்துரையாடல்

0
580

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் ஸ்ரீதரன் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசாவுடன் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது, எனினும் இதன்போது பேசப்பட்ட விடயங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.  

 தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஸ்ரீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிட்ட நிலையில் கடந்த 21 ஆம் திகதி, தமிழரசுக் கட்சியின் தலைவராக சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.