சிறிதரன் எம்.பியை சந்தித்த ஜனாதிபதி வேட்பாளர்

0
104

ஜனாதிபதி வேட்பாளர் மயில்வாகனம் திலகராஜ், யாழ்ப்பாணத்திற்கு (16) விஜயம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டார்.

இதற்கமைய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த  சந்திப்பின்போது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தையும் சிறிதரன் எம்.பியிடம் கையளித்துள்ளார். அதேபோன்று யாழில் பலரையும் சந்தித்து தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை கையளித்து கலந்துரையாடி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.