இலங்கையின் வரி வருவாய் இரண்டு மடங்காக அதிகரிப்பு..

0
218

2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வரி வருவாயில் கணிசமான அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏறத்தாழ இரண்டு மடங்காக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டின் (2023) முதல் பாதிக்குள் (ஜனவரி – ஜூன்) 696,946 மில்லியன் ரூபா வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

இரண்டு மடங்கு அதிகரிப்பு

சிறிலங்காவின் வரி வருவாய் இரண்டு மடங்காக அதிகரிப்பு | 2023 Tax Revenue Update From Govt

இதுவே கடந்த ஆண்டு (2022) இதே காலபகுதியில் 361,832 மில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதன் அடிப்பயில் இந்த ஆண்டு வரி வருவாயின் அதிகரிப்பு,  கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஏறத்தாழ இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.