இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு

0
25

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பை பதிவு செய்துள்ளன. கடந்த ஒகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் செப்டம்பர் மாதத்தில் 1.1% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் கடந்த ஒகஸ்ட் மாதத்தில் 6.17 பில்லியன் அமெரிக்க
டொலர்களாக பதிவாகி இருந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் 6.24 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.