திரையரங்குகளில் இலங்கையின் முதல் 3D திரைப்படம்

0
571

இலங்கை வரலாற்றில் மோசன் கெப்ச்சர் தொழில்நுட்பம் மூலம் முதலில் தயாரிக்கப்பட்ட 3டி திரைப்படம் கஜமென் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இலங்கையின் புகழ்பெற்ற கார்ட்டூன் வரைஞர் கமிலஸ் பெரேராவினால் 1960களில் உருவாக்கப்பட்ட கஜமென் பாத்திரம் பெயர்பெற்று விலங்குகிறது.

அந்த காலத்தில் ‘சத்சிறி’ என்ற சஞ்சிகையில் தொடராக வெளியாகிய இந்த கதை பின்னர் பிரத்தியேக பத்திரிகையாகவும் வெளியானது.

அதனை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ச்சானக பெரேரா இயக்கியுள்ளார்.

ஜோன் பொன்சேகா மற்றும் ச்சாமிக்கா ஜினதாச ஆகியோர் தயாரித்துள்ளனர். உள்ளுர் அரசியல்வாதி ஒருவரின் உதவியாளராக இருக்கும் கஜமெனுக்கும் அரசியல்வாதியின் மகளுக்கும் இடையில் ஏற்படும் காதலும் அதன் பின்னரான நிகழ்வுகளுமே இந்த படத்தின் ஒருவரி கதை.