2025 ஆம் ஆண்டின் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 11 மில்லியன் டொலரை கடந்தது

0
27

இந்த ஆண்டின் (2025) முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 11 பில்லியன் டொலர்களை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த ஆண்டின் (2025) முதல் எட்டு மாதங்களில் மொத்த ஏற்றுமதி வருவாய் 11,554.32 மில்லியன் டொலர்களாகும்.

இது கடந்த ஆண்டின் (2024) இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 6.61 சதவீத அதிகரிப்பாகும். இதன் விளைவாக இந்த ஆண்டின் (2025) முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை நேர்மறையான நிலை மற்றும் நிலையான முன்னேற்றத்தை கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஏற்றுமதி மேம்பாட்டு திணைக்களத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மங்கள விஜேசிங்க கருத்து வெளியிடுகையில் “இந்த வளர்ச்சி, உலகளாவிய வர்த்தகத்தில் இலங்கையின் அதிக ஒருங்கிணைப்பையும், சந்தை வாய்ப்புகளை பல்வகைப்படுத்துவதன் மூலம் ஏற்றுமதி போட்டித்தன்மையை வலுப்படுத்தும் அதன் முயற்சிகளின் வெற்றியையும் எடுத்துக்காட்டுகிறது.

மாறிவரும் உலகளாவிய சந்தைக்கும் அவர்களின் மீள்தன்மைக்கும் நமது ஏற்றுமதியாளர்கள் எவ்வாறு தகவமைத்துக் கொள்கிறார்கள் என்பதையும் இது மீண்டும் ஒருமுறை காட்டுகிறது.’ என்றார்.