நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவு பதிவாகியுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டு பகுதியில் நாட்டின் பொருளாதாரம் 11.5 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது பொருளாதார வளர்ச்சி மறை 11.5 வீதமாக பதிவாகியுள்ளது.
மொத்த தேசிய உற்பத்தி
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் மொத்த தேசிய உற்பத்தி 3,519,400 மில்லியனாக காணப்பட்டதுடன் இந்த ஆண்டு முதல் காலாண்டில் மொத்த தேசிய உற்பத்தி 3,114,187 மில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது.

கைத்தொழிற்துறை மற்றும் சேவைத்துறை என்பனவற்றில் முறையே 23.4 மற்றம் 5 வீதம் என்ற அடிப்படையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
நாட்டின் விவசாயத்துறையில் மட்டும் முதல் காலாண்டு பகுதியில் 0.8 வீத வளர்ச்சி பதிவாகியுள்ளது.