உலக அழகி போட்டியில் இறுதிச் சுற்றுக்கு இலங்கை அனுதி குணசேகர

0
158

72ஆவது உலக அழகி போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இலங்கையைச் சேர்ந்த அனுதி குணசேகர என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெறும் இந்த போட்டியில் இறுதிச் சுற்றுக்கு 24 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அந்த 24 பேரில் உலக அழகி போட்டியின் “HEAD TO HEAD presentation” பிரிவில் ஆசியாவின் முதல் 5 அழகிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அனுதி குணசேகர என்பவர் இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். அனுதி குணசேகர இலங்கையின் அநுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பட்டதாரி ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அழகி போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இலங்கை அனுதி குணசேகர | Anudi Gunasekara Advances To Miss World Finals