இலங்கையின் வருடாந்த பணவீக்கம் 120% ஆக உயர்வு

0
580

இலங்கையின் வருடாந்த பணவீக்கம் 120% ஆக உயர்ந்துள்ளதாக முன்னணி பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கி (Steve Hankey )தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் நிதி உதவி கோரி நிற்கும் சமயத்தில் இலங்கையின் பொருளாதாரம் தற்போது மரணச் சுழலில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னணி பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கி அமெரிக்காவில் உள்ள ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.