இலங்கை பிரஜைகள் கெசினோ சூதாட்ட விடுதிகளுக்கு செல்வதை அரசாங்கம் ஒருபோதும் ஊக்குவிக்காது என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சூதாட்ட விடுதிகளின் செயல்பாடுகள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் புதிதாகத் திறக்கப்பட்ட “City of Dream” போன்ற விடுதிகளில் உள்ள கெசினோ சூதாட்ட நிலையங்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கானவை என அவர் வலியுறுத்தினார்.
உள்ளூர் பிரஜைகள் சூதாட்ட விடுதிகளுக்குள் நுழைவதைத் தடுக்கும் தெளிவான விதிமுறைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இலங்கையை ஒரு சிறந்த சுற்றுலா தலமாக நிலை நிறுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது எனவும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
