24 இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கையர்கள்; இந்திய ஊடகங்கள் செய்தி

0
119

இந்தியாவின் கிழக்கு கடற்பகுதியில் வைத்து 24 இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில் குறித்த தாக்குதலை கண்டித்து நாகப்பட்டின மீனவர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த சிலர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக இந்திய மீனவர்கள் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த மீனவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய கடல் எல்லைப்பகுதியில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.