50 வயதுக்கு மேற்பட்ட உலக அழகி போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை பெண் நாட்டை வந்தடைந்தார்!

0
142

அமெரிக்காவில் நடைபெற்ற 50 வயதுக்கு மேற்பட்ட உலக அழகி போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய  துஷாரி ஜெயக்கொடி வெற்றி பெற்று இன்று ஞாயிற்றுக்கிழமை (28) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

37 நாடுகள் பங்கேற்ற இந்த உலக அழகி போட்டியானது இந்த மாதம் 21 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது.

37 நாடுகளிலிருந்து உலக அழகிகளுக்கு மத்தியில் பெரும் போட்டி நிலவியதாகவும் அதில் வெற்றி பெற்றது இலங்கைக்குக் கிடைத்த பெரும் பாக்கியம் எனவும் துஷாரி ஜெயக்கொடி தெரிவித்துள்ளார் . 

இவர் 50 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் இலங்கையில் நடைபெற்ற உலக அழகி போட்டியில்   வெற்றி பெற்று, இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது .