நெதர்லாந்து தம்பதி ஒன்றினால் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்த பெண் ஒருவர் இலங்கையில் தனது சொந்த தாயை தேடி வருகிறார்.
தனது தாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பெறுமதியான பணப் பரிசு வழங்குவதாக 35 வயதான பெண் ஒருவர் இலங்கை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த பெண் வாதுவையில் உள்ள கிராண்ட் பீச் ஹோட்டலில் தங்கி தனது இலங்கைத் தாயைத் தேடி வருகிறார்.
நெதர்லாந்தில் இருந்து 1985ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி களுத்துறை பொது மருத்துவமனையில் எண் 3570 கொண்ட இலங்கை பிறப்புச் சான்றிதழில் அவரது பெயர் அசோகா என பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவரது தாயார் பெயர் சேனநாயக்க முதியன்செலகே சாந்தனி என குறிப்பிடப்பட்டுள்ளது. 1985ஆம் மே மாதம் 13ஆம் திகதியன்று களுத்துறை நகரப் பிரிவின் மருத்துவச் செயலாளர் எம். எச். செனரத்தினால் பதிவு செய்யப்பட்டது.
பிறப்பு பதிவுக்கான தாயாக 24 வயதான சேனநாயக்க முதியன்செலகே சாந்தனி அறிவிக்கப்பட்டார். மேலும் அவரது முகவரி கந்தகஹவில, பயாகல என வழங்கப்பட்டுள்ளது.
எனினும் அவரது நிரந்தர முகவரி மாத்தறை என வழங்கப்பட்டுள்ளது. 1985 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதியன்று இந்தக் குழந்தை, வெர்னா எலிசபெத் ஜோஸ்பினா பாடன் என்பவரால் நெதர்லாந்தைச் சேர்ந்த ஜேக்கபஸ் ஹெர்மன் மேரி பாடன் மற்றும் எலிசபெத் வில்ஹெல்மினா பாடன் ஆகியோரால் சட்ட பூர்வமாக தத்தெடுக்கப்பட்டது.
நெதர்லாந்து தம்பதியினர் கொழும்பில் வசித்து வந்த நிலையில் குழந்தையை தத்தெடுத்தனர். கொழும்பு மாவட்ட நீதிபதி எச்.எஸ். அகலவத்தே கையொப்பமிட்ட 1985ஆம் மே மாதம் 15ஆம் திகதியிட்ட உத்தரவிற்கமைய குழந்தையை பெற்றுள்ளனர்.
இலங்கை தாயைப் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால் தயவு செய்து நெதர்லாந்து எண் +32474754341 அல்லது +94741120821 என்ற இலங்கை எண்ணில் அழைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏதேனும் தகவல்களை வழங்குபவர்களுக்கு மதிப்புமிக்க ரொக்கப் பரிசு வழங்கப்படும் என மகள் அறிவித்துள்ளார்.