இலங்கை பெண்ணுக்கு அமெரிக்காவில் கிடைத்த கௌரவம்..

0
284

இலங்கையின் பிரபல பாடகி யொஹானிக்கு அமெரிக்காவில் மற்றுமொரு கௌரவம் கிடைக்க பெற்றுள்ளது.

அமெரிக்காவின் நியூயோர்க் சதுக்கத்தில் யொஹானியின் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தெற்காசிய மரபுரிமைகள் மாதத்தை கொண்டாடும் வகையில் இந்த புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இலங்கையின் கலாசாரமும் இசையும்

இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யக்கிட்டியமை பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாக யொஹானி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கலாசாரமும் இசையும் அமெரிக்காவில் கொண்டாடப்படுவதனை காண ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு யொஹானி பாடிய ‘மெனிகே மகே ஹித்தே’ என்ற பாடல் உலக அளவில் பெரும் வரவேற்பினை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.