இளம் தலைமுறைக்கு கிரிக்கெட் மைதானத்தை அமைத்து இலங்கைத் தமிழர்!

0
137

மட்டக்களப்பில் உள்ள இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்காக கிரிக்கெட் மைதானம் ஒன்றை வசீகரன் புவனசிங்கம் என்பவர் அமைத்துள்ளார்.

பிரித்தானியாவில் பெற்றோலியம் வியாபார துறையில் உள்ளவர்களில் குறிப்பிட்டு பெயர் சொல்லக்கூடியவர்களில் ஒருவராக இவர் இருக்கிறார்.

தனது மகனுக்கு பிரித்தானியாவில் எந்த அளவிற்கு தரமான கிரிக்கெட் கற்கை பயிற்றுவிக்கப்படுகிறதோ அதே போன்றதொரு கிரிக்கெட் கற்கை தன் மாவட்டத்தில் உள்ள இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக தனது கடந்த 6 வருடகால வருவாயினை இந்த மைதானத்திற்க்காக செலவு செய்துள்ளார். 

ஆரம்பம் முதலே ஆயிரம் சவால்கள் இருந்தாலும் அவர் சிந்தனைகளும் செயல்களும் மாவட்ட கிரிகெட்டின் நலன் சார்ந்து நேர்மையானதாக இருந்ததாலேயே இது சாத்தியமானது.