தமிழக தொலைக்காட்சி போட்டிகளில் சாதனை படைத்த இலங்கைத் தமிழர்கள்!

0
251

இந்தியாவில்  தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சி அலைவரிசைப் போட்டிகளில் பவானந்தன் சுபவீன் மற்றும் உதயசீலன் கில்மிசா ஆகிய இருவரும் தனது திறமையை காட்டி சாதித்துள்ளனர்.

சுபவீன் 2014 ஆம் ஆண்டு முற்பகுதியில் சன் யூனியர் சிங்கர் போட்டியில் பங்குபற்றி முதல் பரிசை வென்றவராவார். கனடாவிலிருந்து தமிழகம் வந்து 06 மாதங்கள் தொடர்ச்சியாகப் பங்குபற்றி இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

தமிழக தொலைக்காட்சி போட்டிகளில் சாதனை படைத்த இலங்கைத் தமிழர்கள்! | Two Sri Lankan Tamils Tamil Nadu Television

சுபவீனின் தந்தை யாழ். பவானந்தன் வடமராட்சி கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் தாயார் சுதா கைதடியைச் சேர்ந்தவர்.

சுபவீனின் வெற்றிக்கான பாராட்டுவிழா 2014 மார்ச் மாதம் கைதடிச் சந்தியிலுள்ள கைதடி தெற்கு சனசமூக நிலைய அரங்கில் பெருவிழாவாக எடுக்கப்பட்டிருந்தது. இவ்வாறே தற்போது கில்மிசா சீ தமிழ் நிகழ்ச்சியில் வென்று சாதனை படைத்துள்ளார்.

தமிழக தொலைக்காட்சி போட்டிகளில் சாதனை படைத்த இலங்கைத் தமிழர்கள்! | Two Sri Lankan Tamils Tamil Nadu Television