நேபாளத்தில் ஹீரோவான இலங்கை தமிழ் அரசியல்வாதி; குவியும் வாழ்த்துக்கள்

0
29

அண்மையில் நேபாளத்தில் நடந்த போராட்டங்களின் போது, காத்மாண்டுவில் உள்ள ஒரு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தின் போது செந்தில் தொண்டமான் தெய்வாதீனமாக உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறித்த தீ விபத்தின் போது ஹோட்டலில் தங்கியிருந்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநராக செயற்பட்ட செந்தில் தொண்டமான் அவர்களின் குறித்த செயலுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

 தீ விபத்தின் போது பல உயிர்களைக் காப்பாற்றிய அவருக்கு பா.ஜ.க.வின் துணைத் தலைவரான அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது முகநூலில் பதிவொன்றை வெளியிட்டு செந்தில் தொண்டமான் நரகத்தில் சிக்கிய பல குடும்பங்களைக் காப்பாற்ற அவர் விரைவாகத் தலையிட்டு உண்மையான தலைமைத்துவத்தின் ஒரு கலங்கரை விளக்கமாக நிற்கிறார் எனவும் அவர் கூறியுள்ளார். இவர்களுடன் உயிர் தப்பிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சமூக ஊடகங்களில் தங்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.