ரீ-ரிலீஸாகும் கில்லி: உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்

0
148

நடிகர் விஜய்யின் கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீப காலமாக ஏற்கனவே ஹிட்டான படங்கள் ரீ-ரிலீஸாகி வருகின்றன.

ரஜினியின் பாபா, முத்து, கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு, ஆளவந்தான் படங்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ரீ-ரிலீஸாகும் படங்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைப்பதால் விஜய்யின் கில்லியும் அடுத்து களமிறங்குகிறது. அதன்படி கில்லி திரைப்படம் அடுத்தாண்டு ஆரம்பத்தில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிக விரைவில் வெளியீட்டு திகதி குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்புகள் படக்குழு தரப்பில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.