ரஜினிகாந்தை பார்க்க லண்டனில் இருந்து பறந்து சென்ற இலங்கை தமிழ் ரசிகர்கள்!

0
256

புத்தாண்டை முன்னிட்டு தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பார்க்க பல்வேறு மாநிலங்களில் இருந்து அவரது ரசிகர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த திகதிகளில் ரஜினிகாந்தை பார்க்க அவரின் வீட்டின் முன் வருவது ரசிகர்கள் வழக்கமான ஒன்றான உள்ளது.

இருப்பினும் இம்முறை ரஜினிகாந்தை பார்க்க லண்டனில் இருந்து இரு பெண்கள் உட்பட மூன்று இளம் இலங்கைத் தமிழ் ரசிகர்கள் வந்துள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பார்க்க லண்டனில் இருந்து பறந்து வந்த இலங்கைத் தமிழ் ரசிகர்கள்! | Fans Came To London To See Superstar Rajinikanth

மேலும் அவர்களிடம் லண்டனில் பல ஹாலிவுட் நடிகர்கள் இருக்கிறார்கள். எனினும் குறிப்பாக ரஜினியை பார்க்க வந்தது எதற்கான என ஊடகவியாலாளர் ஒருவர் வினவியபோது அவர்தான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன் அவரை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என கூறியுள்ளனர்.

ரஜினிகாந்தின் எந்த படங்கள் உங்களுக்கு பிடிக்குமென கேட்டபோது முத்து, படையப்பா நாங்கள் 90ல் என்பதால் அப்போது வந்த அனைத்து படங்களும் பிடிக்கும் என நெகிழ்ச்சியான கூறியுள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பார்க்க லண்டனில் இருந்து பறந்து வந்த இலங்கைத் தமிழ் ரசிகர்கள்! | Fans Came To London To See Superstar Rajinikanth