சீனாவுக்கு இலங்கை குரங்குகள்; விசாரிக்க சிறப்புக் குழு நியமனம்

0
662

இலங்கையின் ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு வழங்குவது தொடர்பான ஆய்வுக்காக 4 அமைச்சுக்களின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் வனவிலங்கு, நீதி, பெருந்தோட்டங்கள் மற்றும் விவசாய அமைச்சுக்களின் அதிகாரிகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சிடம் கோரிக்கை

இலங்கையில் உள்ள குரங்குகளை சீனாவிலுள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு வழங்குமாறு சீன பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

அதேவேளை இலங்கையின் குரங்குகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு முன்னர் முறையான கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.