இலங்கை கிரிக்கெட் அணி மீண்டெழும்; முன்னாள் தேர்தல் ஆணையாளர் நம்பிக்கை

0
240

இலங்கை கிரிக்கெட் அணி மீண்டெழும் என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணி மீண்டும் வழமையான திறமைகளை வெளிப்படுத்தும் என்ற நம்பிக்கை உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணி

தற்காலிக அடிப்படையில் இலங்கை அணி பின்னடைவை சந்தித்து வருவதாகவும் அணிக்குள் ஒற்றுமை நிலை குறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து பயிற்றுவிப்பாளர்களும் நிர்வாகிகளும் கவனம் செலுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி மீண்டெழும்: மகிந்த தேசப்பிரிய நம்பிக்கை | Ex Maco Upbeat On Revival Of Sri Lanka

வீரர்களின் மன திடத்தை வலிமைப்படுத்தும் வகையில் செயற்படாது அவர்களை உற்சாகப்படுத்தி மீண்டெழச் செய்ய வேண்டுமென மகிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார். 

இதேவேளை, நியூசிலாந்திற்கு எதிரான இன்றைய போட்டியிலும் இலங்கை அணி படு தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.