சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள இலங்கை சிறுமி அசானி பாடிய ”ஊரு சனம் தூங்கிருச்சு” பாடல் இணையத்தில் வைரலாகி உள்ளது.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சேம்ஸ் இரு சீசன்களை கடந்து தற்போது 3ஆவது சீசன் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினி அர்ச்சனா தொகுத்து வழங்கி வருகிறார்.
28 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த சீசனில் இது வரை 5 பேர் வெளியேறியுள்ளனர். மீதம் 23 பேர் போட்டி போட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நிகழ்ச்சியில் அசானி கனகராஜ் நேற்று உத்தியோகபூர்வமாக உள்வாங்கப்பட்டார்.
அசானி போட்டியாளராக கலந்து கொண்ட பின்னர் பாடிய “ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு” பாடல் தற்போது அனைவரது கவனத்தினையும் ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும், அசானி வெற்றி பெறவேண்டும் என்று வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.