பிரித்தானியாவில் காணாமல் போன இலங்கை இராணுவ அதிகாரி: எந்த தகவலும் இல்லை என அறிவிப்பு

0
55

பிரித்தானியாவில் காணாமல் போன இலங்கை இராணுவ அதிகாரியான மொஹமட் அனீக் எங்கிருக்கிறார் என்பது குறித்து இலங்கை அதிகாரிகளுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் குறித்த விசாரணைகள் இலங்கை இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்டள்ளது.

பிரித்தானியாவின் புகழ்பெற்ற Sandhurst இராணுவ அக்கடமியில் பயிற்சியை நிறைவு செய்து அண்மையில் வெளியேறிய இலங்கை கெடட் அதிகாரி இரண்டாம் லெப்டினன்ட் மொஹமட் அனீக் (Mohammad Aneek) நாடு திரும்பவில்லை.

குறித்த அதிகாரி 44 வார பயிற்சிக்குப் பிறகு ஓகஸ்ட் ஒன்பதாம் திகதி விடுவிக்கப்பட்டார். அத்தடன் ஓகஸ்ட் 11ஆம் திகதி அவர் இலங்கைக்கு வரவிருந்த போதிலும், அவர் திட்டமிடப்பட்ட விமானத்தில் திரும்பவில்லை.

அவர் நாடு திரும்புவதற்கான வசதிகளை இலங்கை உயர்ஸ்தானிகராலயம் செய்திருந்தது. எவ்வாறாயினும், அவர் திட்டமிட்ட விமான பயணத்திற்கு திரும்பியிருக்கவில்லை. காணாமற்போன அதிகாரி மாவனல்லை இம்புல பிரதேசத்தில் வசிப்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காணாமல் போன இராணுவ அதிகாரியான மொஹமட் அனீக் எங்கிருக்கிறார் என்பது குறித்து இலங்கை அதிகாரிகளுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.