நெருக்கடியில் இருந்து இலங்கை விரைவில் மீளும்! நிர்மலா சீதாராமன்

0
314

இலங்கையின் கடன்விவகாரத்திற்கு விரைவில் தீர்வை காணவேண்டும் என ஜி20 நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

பெங்களுரில் இடம்பெற்ற ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்ட முடிவில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விரைவில் நெருக்கடிகளிலில்ருந்து மீளவுள்ள இலங்கை! நிர்மலாசீத்தாராமன் | Sri Lanka Will Soon Recover Nirmala Seetha Raman

ஜி 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தின் அறிக்கையை வாசித்த இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நடுத்தர மற்றும் குறைந்த வருமான நாடுகளின் கடன் பலவீன தன்மைக்கு தீர்வை காணவேண்டியதன் அவசரத்தை அங்கீகரிப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையின் கடன்நிலவரத்திற்கு விரைவான தீர்வை காண்பதற்கு எதிர்பார்த்துள்ளோம் எனவும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.