வதைக்கும் வெப்பத்தால் வறண்டு மடியும் இலங்கை

0
488

இலங்கை என்று கூறும் போது, இயற்கை வளங்கள் பலவும் நிறைந்த நாடாகவே முதலில் அடையாளப்படுத்தப்படும்.

சமுத்திரம், நிலம், பாறைகள், மண், கனியங்கள், நீர், காடுகள் என்ற அனைத்து வளங்களும் நிரம்பி வழியும் நாடாகவே இலங்கை காணப்படுகின்றது.

அதேசமயம், இலங்கையின் அமைவிடமானது பல்வேறு இயற்கை அனர்த்தங்களுக்கும் முகம்கொடுக்கக் கூடியதாகவே அமைந்திருப்பதாக புவியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சனல் 4வின் அதிர்ச்சியூட்டும் காணொளி: புலம்பெயர் தமிழர்கள் மீது பழி போடும் தென்னிலங்கை ஊடகம்

பாதிக்கப்படும் வாழ்வியல்

அதிலும், கடந்த சில தசாப்தங்களாக இலங்கையில் இடம்பெறும் இயற்கை அனர்த்தங்கள் பாரிய தாக்கங்களை ஏற்படுத்துவதாக அமைந்திருப்பதுடன் இவற்றில் காலநிலை மாற்றம் பாரிய செல்வாக்கைச் செலுத்துகின்றது.

இந்த இயற்கை அனர்த்தங்களால், காலநிலை மாற்றங்களால் எற்படும் விளைவுகள் பொருளாதாரத்திலும், மக்களது வாழ்வியலிலும் கூட தாக்கம் செலுத்துபவையாகவே அமைகின்றன.

குறிப்பாக, விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு காலநிலை மாற்றத்தால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. அதிலும், வறட்சியினால் ஏற்படும் பாதிப்புக்கள் மிக அதிகமானவை.

வறட்சியின் கோரத் தாண்டவம்

வறட்சி என்பது ஒரு பிரதேசத்தில் இயல்பை விட குறைவான மழைவீழ்ச்சியை அனுபவிக்கும் காலமாகும். போதிய மழைப்பொழிவு, அல்லது பனி இல்லாமை, மண்ணின் ஈரப்பதம் அல்லது நிலத்தடி நீர் குறைதல், நீரோடை ஓட்டம் குறைதல், பயிர் சேதம் மற்றும் பொதுவான நீர் பற்றாக்குறை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இதனால், விவசாய நடவடிக்கைகள் முற்றிலும் ஸ்தம்பிதம் அடையும் நிலை ஏற்பட்டுவிடுகின்றது.

அடைமழை பெய்தால் வெள்ளத்தில் மூழ்கும் கொழும்பு: காரணம் வெளியிட்ட அதிகாரிகள்

அவ்வாறான ஒரு இக்கட்டான நிலையையே தற்போது, வடக்கில் உள்ள மக்கள் எதிர்நோக்கியுள்ளனர். சொல்லப் போனால் வடக்கில் வறட்சி கோரத் தாண்டவம் ஆடுகின்றது.

குளங்கள் வறட்சியால் வற்றிப்போய், மீன்கள் செத்துப் போக தொழில்களை இழந்து மக்களை வறுமை வாட்டத் தொடங்கி விட்டது. வாழும் பயிர்களில் விளைச்சல் குறைந்து வருமானம் குறைகிறது.

குளங்கள் வறண்டு போவதால் அவற்றுக்கருகில் உள்ள நிலத்தில் நிலத்தடி நீரும் கீழிறங்கிச் செல்லுகிறது. மண்ணில் ஆழ வேர் ஊடுருவி நீர் பெறும் தாவரங்களில் விளைச்சல் வெகுவாக குறைந்து வருகின்றது. வாழை போன்ற ஆண்டுத் தாவரங்கள் பாதிக்கப்பட்டுப் போவதோடு சிறுதானியப் பயிர்ச்செய்கையும் பாதிக்கப்படுகிறது.

வாட்டி வதைக்கும் வெப்பத்தால் வறண்டு மடியும் இலங்கை.... | Weather Alert Sri Lanka

பெரும் அவல நிலை

வடக்கிலங்கையில் நீரினை மூலமாக கொண்ட தொழில்முறை வாழ்வே பிரதானமாக இருக்கும் போது குளங்கள் நீரிழப்புக்குள்ளாகி வருவது பெரும் அவல நிலையை ஏற்படுத்தி வருகிறது.

சிறுதானியப் பயிர்களின் பயிர்ச்செய்கை முற்றாக முடங்கிப் போகிறது. நீர்நிலைகளில் மீன் பிடித்தல், தாமரைப் பூ மற்றும் இலைகளை பெற்று விற்கும் ஒரு பகுதி மக்கள் தொழிலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை வாழ்வதாரத் தொழிலாகக் கொண்டு வாழும் மக்களது வாழ்வியலும் முடங்கிப் போகும் நிலைக்குச் சென்றுள்ளது.

கால்நடைகளுக்கான குடிநீரைப் பெறுவதும் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதுடன் கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர்.

சிறுபோகம் முடிவடைந்து பெரும் போகத்திற்கான நிலப் பண்படுத்தல்களில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். உரிய காலத்தில் பெரும் போகத்திற்கான மழைவீழ்ச்சி போதியளவில் கிடைக்காது போகும் போது நிலைமை பெரும் அவலத்தை ஏற்படுத்திப் போகும். குளங்களின் புணரமைப்புக்காக பல குளங்களின் நீரை தேக்காது திறந்து விட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.