இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை!

0
589

இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

அதன்படி நேற்று நள்ளிரவு முதல் சேவையில் இருந்து விலகி செயற்பட தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அனைத்து பேருந்து சேவைகளும் இன்று வழமை போன்று முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

அதேசமயம் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்பு தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்