பேரிடரில் உதவிய சீன அரசாங்கத்திற்கு நன்றி கூறிய இலங்கை!

0
15

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வெளிநாட்டு நாடுகளுடனான நட்புறவுக்கான சீன மக்கள் சங்கத்தின் தலைவர் யாங் வான்மிங்கை இன்று (12) வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தில் சந்தித்துள்ளார்.

இதன்போது டிட்வா புயலை தொடர்ந்து இலங்கைக்கு “உறுதியான மற்றும் விலைமதிப்பற்ற ஆதரவை” வழங்கியதற்காக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு அமைச்சர் விஜித ஹேரத் சீன அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

இச்சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் நட்பு ரீதியான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தியதாக அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.