உலகில் பணவீக்கம் கொண்ட நாடுகளின் வரிசையில் 3வது இடம் இலங்கை

0
499

உலகில் அதிக பணவீக்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த விடயம் உலக பொருளாதார நிபுணரான ஸ்டீவ் ஹென்கியின் (Steve Hanke)  மாதாந்த பணவீக்க சுட்டெண் அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய முதலாவது இடத்தில் சிம்பாவ்வேயும், இரண்டாவது இடத்தில் லெபனானும் மூன்றாவது இடத்தில் இலங்கையும் காணப்படுகின்றது.

அதேவேளை கடந்த பெப்பிரவரி மாத்தில் இலங்கை இரண்டாம் இடத்தில் அதிக பணவீக்கம் கொண்ட நாடாக பெயரிடப்பட்டிருந்த நிலையில், தற்போது மூன்றாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.