ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) நிறுவனத்தின் மிக சமீபத்திய ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியின் (2021 ஆம் வருடத்தின்) அடிப்படையில் இலங்கையானது 102ஆவது இடத்தில் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
இந்த மதிப்பாய்வுச் சுட்டியானது உலகெங்கிலுமுள்ள 180 நாடுகள் மற்றும் ஆட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெறுகின்ற பொதுத்துறை சார்ந்த ஊழல்களின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்படுகின்றது.

இதன்படி “ஆட்சியை வலுப்படுத்தவும் ஊழல் செயற்பாடுகளை குறைக்கவும் முயற்சிகள் தொடரப்பட வேண்டும்” என குறித்த மதிப்பாய்வு அறிக்கையின் பிரிவு 4 பரிந்துரைக்கிறது.