2026 ஆம் ஆண்டில் ஆசியாவில் பார்வையிட சிறந்த ஐந்து இடங்களில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்க செய்தி மற்றும் உலக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது, நாட்டின் சுற்றுலாத்துறை மீட்சியின் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
பன்முகத்தன்மை கொண்ட சலுகை மற்றும் உலகளாவிய பயணிகளுக்காக மேம்படுத்தப்பட்டு வரும் ஈர்ப்பை மேற்கோள்காட்டி இந்தப் பட்டியலில் இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.
அணுகல், மலிவு, கலாசாரம், சமையல் செழுமை, ஈர்ப்புகள் மற்றும் வாசகர் உணர்வு உள்ளிட்ட விடயங்கள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.



