கனடாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலங்கை இரங்கல்

0
24

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இலங்கை ஆழ்ந்த இரங்கல் வெளியிட்டுள்ளது. பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுள்ளார்.

சமூக ஊடகப் பதிவொன்றின் அவர் இரங்கலை வெளியிட்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தங்களது நேசத்திற்கு உரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை வெளியிடுவதாக தெரிவித்துள்ளார். இந்த நெருக்கடியான நேரத்தில் கனடிய மக்களுடன் இணைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் பரந்த சமூகத்தினருடன் இலங்கையின் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் இழப்பை சமாளிக்கும் இக்கடினமான நேரத்தில் வலிமை, ஆறுதல் மற்றும் அமைதி பெறுவார்கள் என இலங்கை நம்பிக்கை தெரிவித்துள்ளது.