உள்ளாடைகளை காட்ட கூடிய நாடு அல்ல இலங்கை; சுனில் ஹந்துன்நெத்தி

0
114

இலங்கையில் வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்த நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்களின் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன.

இவ்வாறான நிலையில், சஜித் கட்சி ஆதரவாளரான தேசிய ஜன பலவேகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, இந்த நாடு உள்ளாடைகளைக் காட்டக்கூடிய நாடு அல்ல என கூறியுள்ளார்.

அடியில் அணிந்துள்ள உள்ளாடைகளை துவைத்து பகிரங்கமாக காய வைக்க முடியாது, ஏனெனில் ‘உள்ளே அணிந்திருக்கும் ஆடைகள் நாராய் கிழிந்து ஓட்டைகள் உள்ளன,’ என்றார்.

எனவே, சட்டைகள் வெளியில் துவைத்து காய போட்டாலும், உள்ளாடைகளை அறைக்குள்தான் துவைத்து உலர்த்துகின்றனர் எனவும் சுனில் ஹந்துன்நெத்தி கூறினார்.

கிண்ணியாவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.