ஐ.நா விடுத்துள்ள கடும் எச்சரிக்கையால் சிக்கலில் இலங்கை

0
197

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக பொறுப்புகூறலை இலங்கை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் சர்வதேசம் அது தொடர்பாகச் செயற்பட முடியும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் எச்சரித்துள்ளார்.

அத்துடன், நம்பகமான குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்புகூற வேண்டியவர்களுக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும் எனவும் ஐ.நா மனித உரிமைகள் அமர்வில் முன்வைத்த இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஆழமான அரசியலமைப்பு மறுசீரமைப்புக்களை மேற்கொண்டு பொறுப்புகூறல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவது மாத்திரமல்லாமல் மனித உரிமைகளைப் பாதுகாப்பதையும் உறுதிப்படுத்துமாறு இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அரசாங்கத்தை அலுவலகம் வலியுறுத்துகின்றது.