இலங்கையில் வடகிழக்கு காஸாவை போல் பேரினவாதத்தின் சுடுகாடே; சாணக்கியன்

0
162

காஸா போல் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளும் இன்றும் பேரினவாதத்தால் சுடுகாடாகவே உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

“இன்றும் வடக்கு கிழக்கு பகுதிகளை சுடுகாடாக வைத்துக் கொள்ளவே பேரினவாதம் விரும்புகின்றது. இப்பகுதி சுடுகாடாக மாறிவரும் நேரத்தில் மௌனம் காத்தது உலக நாடுகள்.

ஆனால் இன்று காஸா பிரதேசமும் அவ்வாறு மாறிவருவதையும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்படுவதையும் தமிழராக எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

காஸா மக்களின் வலியும், வேதனையும் நாம் ஏற்கனவே அனுபவித்தவைகள். 2009 ஆம் காலக்கட்டத்திற்கு முன்னர் எம் குழந்தைகளும் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள். ஓர் இனம் அழிவதை பாற்சோறு கொடுத்து கொண்டாடும் மனநிலையில் தமிழர் இனம் என்றும் இல்லை.

எங்கு அநியாயம் நடக்கின்றதோ அங்கு எமது மக்களினதும் எனதும் குரல் ஒலிக்கும். அப்பாவி மக்களின் பக்கமே எம் குரல்” என தெரிவித்தார்.