இலங்கையில் புதிய கோவிட் திரிபினை கண்டறிய போதிய வசதியில்லை..!

0
121

இலங்கையில் கோவிட் புதிய திரிபினை கண்டறிவதற்கு தேவையான போதிய வசதியில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தற்பொழுது இந்தியாவில் வேகமாக பரவி வரும் ஒமிக்ரோன் ஜே.என்.1 இலங்கைக்குள் பரவியிருக்கலாம் என சுகாதார தரப்பினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

எனினும் இது தொடர்பிலான பரிசோதனைகளை நடாத்தக் கூடிய மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படவில்லை என சுகாதார பணியாளர்களின் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

புதிய கோவிட் திரிபு

கோவிட் பரிசோதனை நடத்தக்கூடிய ரெபிட் என்டிஜன் உபகரணங்கள் மருத்துவ விநியோகப் பிரிவின் கையிருப்பில் உள்ள போதிலும், அவை மருத்துவமனைகளுக்கு வழங்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகின் பல நாடுகளில் புதிய கோவிட் திரிபு பரவி வரும் நிலையில், இலங்கையில் இந்த திரிபு கிடையாது என உறுதிபடுத்தி எவராலும் கூற முடியாது எனவும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

புதிய கோவிட் திரிபின் தகவல்களை வெளியிட சுகாதார அமைச்சு தயக்கம்:சுகாதார தரப்பினர் குற்றச்சாட்டு | Covid New Varient J1 Srilanka

இந்த புதிய கோவிட் திரிபினால் சில நாடுகளில் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், இலங்கை சுகாதாரத் துறையினர் இந்த விடயத்தில் மெத்தனப் போக்கினை பின்பற்றி வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பரிசோதனை நடத்தி உண்மையை நாட்டுக்கு வெளிப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தயக்கம் காட்டி வருவதாகவும் தொழிற்சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.