சிங்கப்பூரில் வழக்கு தொடர இலங்கை முடிவு!

0
478

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளானதில் இலங்கையின் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இன்று (24) வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி உரிமைகோரல் நடவடிக்கையை நிறுவுவதற்கு சிங்கப்பூர் பொருத்தமான இடமாக இருக்கும் என்பதால் அமைச்சரவை அனுமதியுடன் சிங்கப்பூரில் உள்ள சட்ட நிறுவனமொன்றிடம் இந்த நடவடிக்கைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் சஞ்ஜய இராஜரட்ணம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.