சுதந்திர தினத்தன்று கைதிகளை சந்திக்க சிறப்பு சலுகை: 40 வார்த்தைகளில் தினசரி செய்தி…

0
225

இரண்டு வாரங்களில் பேரூந்துக் கட்டணம் அதிகரிப்பு

இன்னும் இரண்டு வாரங்களுக்குள் பேரூந்துக் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்தின எச்சரித்துள்ளார். டீசல் விலை அதிகரிப்பின் காரணமாக பேரூந்துக் கட்டணங்களை கட்டாயமாக அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. எனவே ஆகக்குறைந்த தொடக்க கட்டணம் 35 ரூபாயாக அறவிடப்படும் என்றும் தெரிவித்தார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகளைப் பார்வையிடுவோருக்கு விசேட சலுகை

சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகளைப் பார்வையிடுவோருக்கு விசேட சலுகை வழங்கப்படவுள்ளது. சுதந்திர தினத்தன்று திறந்த இடத்தில் தடுப்புகள் இன்றி கைதிகள் தமது உறவினர்கள், நண்பர்களை சந்திக்க அனுமதிக்கப்படவுள்ளனர். தடை செய்யப்பட்ட பொருட்களை சிறைச்சாலை வளாகத்திற்குள் கொண்டு வருவதை தவிர்க்குமாறு சிறைச்சாலை திணைக்களம் எசசரித்துள்ளது.

சுகாதார தொழிற்சங்கங்களின் தொடரும் பணி பகிஷ்கரிப்பு

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார சேவை தொழிற்சங்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார சேவையின் 72 தொழிற்சங்கங்கள் நேற்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தன.இந்நிலையில், இன்றும் பணிப்புறக்கணிப்பு தொடரும் என்று சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

கெஹெலிய இன்று CID இல் முன்னிலை

மருந்து இறக்குமதி தொடர்பில் வாக்குமூலம் அளிக்கும் வகையில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார். அத்துடன், அவருக்கு வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வீட்டுக்கு தீவைத்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற போராட்டத்தின் பொது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.