புதிய 2000 ரூபாய் தாள் தொடர்பாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

0
40

இலங்கை மத்திய வங்கியின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம் 29 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2000 ரூபா நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, உரிமம் பெற்ற வணிக வங்கிகள் புதிய நாணயத்தாள்களை மக்கள் புழக்கத்திற்கு எளிதாக மாற்றியமைக்க தங்கள் பண கையாளும் இயந்திரங்களை அளவீடு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயல்முறையின் முன்னேற்றத்திற்கு ஏற்ப, புதிய நாணயத்தாள் உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மூலம் படிப்படியாக புழக்கத்திற்கு வெளியிடப்படும் என்றும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அளவுத்திருத்த செயல்முறை முடிந்ததும், புதிய நாணயத்தாள் அனைத்து வங்கி வழிகள் வழியாகவும் புழக்கத்திற்கு ஏற்றதாக மாற்றப்படும் என்றும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்த மாற்றத்தின் போது பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரியுள்ள மத்திய வங்கி, இயந்திர அளவுத்திருத்தம் முடிந்ததும் புதிய நாணயத்தாள் அனைத்து வங்கி வழிகளிலும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளது.

எனவே இதற்குத் தேவையான காலகட்டத்தில் பொதுமக்களின் ஆதரவை இலங்கை மத்திய வங்கி பெரிதும் பாராட்டுகிறது என்றும் இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

அதன்படி, இது தொடர்பாக கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ள நாயணத் திணைக்களத்தை தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அல்லது இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ இணையதளத்திற்குள் பிரவேசிக்குமாறும் அல்லது
அதன் சமூக ஊடகத் தளங்களைப் பின்தொடருமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.