செவ்வாய்க்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் விண்கலம் தயார்!

0
238

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் விண்கலம் தயாராக உள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் அறிவித்துள்ளது.

உலகின் பிரபல பாணக்காரர் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப் விண்கலத்தை உருவாக்கியுள்ளது.

இந்த ஸ்டார் சிப் விண்கலம், மனிதர்களை நிலவு, செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்ல உருவாக்கப்பட்டதாகும்.

25 முதல் 30 மாடி உயரம் கொண்ட இந்த விண்கலம், 120 டன் எடை கொண்டது. உலகின் மிக சக்தி வாய்ந்த டிராகன் பூஸ்டர்ஸ் ராக்கெட் மூலம், இந்த விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது.

செவ்வாய்க்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் விண்கலம் தயார்! ஸ்பேஸ் எக்ஸ் | Spacecraft Ready To Take Humans To Mars Spacex

இந்த விண்கலம், புவிஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு, தானாக பயணித்து, தரையிறங்கும் வல்லமை கொண்டது.

விண்கலத்தின் அனைத்து சோதனைகளும் நிறைவு செய்துள்ளது. ஸ்பேக் எக்ஸ் ராக்கெட் ஏவுதளத்தில் விண்கலம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மனிதர்களை ஏற்றி செல்வதற்காக, அமெரிக்க விண்வெளி துறையின் அனுமதிக்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் காத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.