சோபிதா துலிபாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்து அதில் குறுந்தொகை பாடலை கேப்ஷனாக இட்டுள்ளார்.
அதாவது குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான காதலர்களால் என்றைக்கும் கொண்டாடப்படுகின்ற பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பகிர்ந்துள்ளார்.
சோபிதா பகிர்ந்துள்ள குறுந்தொகை பாடல்,
“யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” என்ற பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பகிர்ந்துள்ளார்.
ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட துலிபாலா, கடந்த 2013ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா சவுத் பட்டத்தை வென்றார். மொடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வந்த சோபிதா துலிபாலா அதன் பின்னர் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.
தமிழில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் நடித்த முதல் தமிழ் படம் இதுதான். படங்கள் மட்டும் இல்லாமல் வெப் சீரீஸ்களிலும் சோபிதா துலிபாலா நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
