விரைவில் தனியார் வசமாகும் இலங்கை எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!

0
578

வெகு விரைவில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான சுமார் 500 முதல் 700 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தனியார் துறைக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெரும்பாலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எரிபொருட்களின் சில்லறை விற்பனை செயற்பாடுகளுக்காக 500 முதல் 700 எரிபொருள் நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

அடுத்த 4 மாதங்களுக்கு எரிபொருட்களை கொள்வனவு செய்ய 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என்ற அடிப்படையில் அதற்கான வாய்ப்புகள் அரிதாகவே உள்ளன.

வெகு விரைவில் தனியார் வசமாகும் இலங்கை எரிபொருள் நிலையங்கள்! | Privately Owned Petrol Stations In Sri Lanka

இதனையடுத்தே எரிபொருள் நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த வெளிநாட்டு நிறுவங்களில் சீனாவின் சினோபெக் குழுமம், பிரிட்டிஷ் ஷெல் நிறுவனம் மற்றும் இந்திய நிறுவனங்களின் 27 முன்மொழிவுகள் இலங்கை மின்சார சபைக்கு கிடைத்துள்ளன.

இதன்படி குறித்த எரிபொருள் நிலையங்களை வழங்குவதற்காக நான்கு முன்மொழிவுகளை சுருக்கப்பட்டிலுக்குள் கொண்டுவர எரிசக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

வெகு விரைவில் தனியார் வசமாகும் இலங்கை எரிபொருள் நிலையங்கள்! | Privately Owned Petrol Stations In Sri Lanka

இந்த திட்டத்தின்படி, எரிபொருள் நிலையங்களை கொள்வனவு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள், எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகம் செய்ய வேண்டும்.

அதே நேரத்தில் போக்குவரத்து வசதிகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அடுத்த மாதத்திற்கான டீசல், பெட்ரோல் மற்றும் கச்சா எண்ணெய் தேவைகளை இறக்குமதி செய்வதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிக்குமாறு திறைசேரி மற்றும் மத்திய வங்கியிடம் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.