போர் பதற்றத்தால் மகன் திருமணம் நிறுத்தம்; ஈரான் மீது கடுப்பில் பெஞ்சமின் நெதன்யாகு!

0
202

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நீடித்து வரும் மோதல்கள் காரணமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் (benjamin netanyahu) மகன் அவ்னர் நெதன்யாகுவின் (Avner Netanyahu) திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்று ஜூன் 16ஆம் திகதி டெல் அவிவ் நகரில் நடைபெறவிருந்த அவ்னர் நெதன்யாகுவின் திருமணம் போர் சூழல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலியர்கள் சிலர் இன்னும் காஸாவில் பிணை கைதிகளாக இருக்கும் நிலையில் பிரதமர் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது சரியல்ல என அரசுக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பின.

இதைத் தொடர்ந்தே அவ்னர் நெதன்யாகுவின் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேவேளை டெல் அவிவ் நகரை சுற்றிலும் திருமண விழாவுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதேவேளை இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் இன்று நான்காவது நாளாவும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.