நுவரெலியாவில் பொழிந்த பனிக்கட்டிகள்: வைரலாகும் புகைப்படங்கள்

0
50

நுவரெலியாவில் (Nuwara Eliya) இன்று (11) காலை வேளையில் பனிக்கட்டிகள் விழுந்துள்ள புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடையில் காலநிலை மாற்றத்துடன் நுவரெலியாவில் உறைபனிக் கட்டிகள் விழும் ஆனால் இம்முறை நுவரெலியாவில் காலை வேலையில் இன்று (11) அதிக பனிப்பொழிவு காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலைமையில் நுவரெலியா பிரதேசத்தில் வெப்பநிலை 4-7 பாகை செல்சியஸ் ஆக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலை 8.30 மணிக்கு முன் கடும் குளிராகவும் மதியம் கடும் வெயிலாகவும் காணப்படுகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை மேற்கு சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, பதுளை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.