வவுனியாவில் யுவதி மீது துப்பாக்கிச்சூடு; பரிதாப மரணம்!

0
710

வவுனியாவில் உள்ள பகுதியொன்றில் இரவு இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் யுவதியொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (18-10-2022) இரவு நெடுங்கேணி சிவா நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சிவா நகர் பகுதியில் வசிக்கும் துரைராஜசிங்கம் பிரமிளா என்ற 21 வயது யுவதி தனது வீட்டிற்கு வெளியில் வரும்போது அவர் மீதே இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.