இலங்கை கிரிக்கெட் வீரரான தனுஷ்க குணதிலகவுக்கு 150,000 அவுஸ்திரேலிய டொலர் அபாரதம் செலுத்தப்பட்டது தொடர்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இத் தொகையை அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவரினால் வழங்கப்பட்டதாகவும் அந்தப் பெண் தொடர்பில் இது வரையில் எவ் வித தகவலும் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையர்கள்
அத்தோடு அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்கள் தனுஷ்க குணதிலக்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பிணை பெறும்போது அவுஸ்திரேலிய பொலிஸாருக்கு நிரந்தர முகவரியை வழங்க வேண்டியிருப்பதால் குணதிலக்கவுக்கு அந்நாட்டில் உள்ள செல்வந்தர் ஒருவரின் வீட்டின் முகவரி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த வீட்டிலேயே அவர் வசிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வழக்கு முடியும் வரை அவரது செலவுகளை அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்கள் ஏற்க முன்வந்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.